Tuesday, June 19, 2018

என் ஃபிரண்டப்போல யாரு மச்சான் !

💐 நட்பு என்பது ஆழமான அன்பின் உறைவிடம். நட்பு, தோழமை, சினேகம் என்பது வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டது.

💐 நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

💐 தோழமை என்பது பூலோகத்தின் சொர்க்கவாசல். அந்த வாசலின் சாவி நம்முடைய நேசம் தான். நட்பு என்பது சுயநலமில்லாமல் இருக்க வேண்டும்.

💐 வரலாற்று பக்கங்களில் எல்லாம் நட்பின் சுவடுகள் இன்னும் அழியாமல்தான் இருக்கின்றன. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு, அதியமான்-அவ்வையார் நட்பு, கண்ணன்-குசேலன் நட்பு, துரியோதனன்-கர்ணன் நட்பு இவையெல்லாம் நட்பின் கோபுரங்கள்.

💐 ஆடை அவிழும் போது கை தானே சென்று கீழே விழாமல் காப்பது போல நண்பன் துன்பப்படும்போது ஓடிசென்று உதவுவது நட்பு என வள்ளுவர் கூறுகிறார்.

💐 நமது வாழ்க்கை பாதையில் நண்பர்களின் பங்கு மிக முக்கியமானது. நறுமண மலர்களை மாலையாக தொடுக்கும் வாழைநார் கூட பூவின் வாசனையைப் பெற்று நறுமணம் வீசுகின்றது. அதுபோல சாக்கடையில் வீழ்ந்த வாசனைமிக்கமலரும் சாக்கடையின் வாசத்தையே பெற்றுவிடுகின்றது.

💐 ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

💐 உண்மையான நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின்போது காணாமல்போனாலும் உங்களுடைய துயரவேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.

💐 நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள். நமது பெற்றோரையும், உடன்பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்கவேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.

நண்பனின் கெட்டப் பழக்கம் நம்மை பாதிக்குமா? 

💝 தீய நண்பர்களின் நட்பும் சகவாசமும் இருக்கும் சிலர், என் நண்பர்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்கள் என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், ஆனால் எனக்கு நண்பர்களாக இருந்தால் போதும் என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.

💝 ஒரு ஆப்பிள் கூடையில் ஒரு அழுகிய ஆப்பிள் இருந்தாலும் அது மற்ற ஆப்பிள்களையும் கெடுத்துவிடும். அதுபோல இந்த நட்பும் கூடா நட்பாக அமைய வாய்ப்புள்ளது.

💝 தனது நண்பர்கள் மனம் நோகக்கூடாது மற்றும் நட்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பலர், நண்பர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும், அவர்களது வற்புறுத்தலின் பேரில் தாங்களும் செய்யத் துணிகின்றனர். நட்பை இதற்கு ஒரு காரணமாக காட்டுகின்றனர். உண்மையில் நட்பு என்கிற சொல்லையே இது களங்கப்படுத்துவதாகும். ஆனால் உண்மை நட்பு என்பது ஒருவனை கெடுக்காது இருப்பதுதான்.

💝 யார் நல்ல நண்பர் என்பதைக் கண்டுபிடிக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஏனெனில் நல்ல நண்பர் என்ற போர்வையில், நம் வாழ்வை கெடுக்கும் எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

உங்களின் உண்மையான நட்பிற்கான அன்பு பரிசை ஏற்றுக்கொள்ள கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்! 

http://bit.ly/2JZ2Eli 

உங்களின் உண்மையான நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள்! 
 நண்பேண்டா!.......

லைஃபை என்ஜாய் பண்ணனும் மச்சி என்று உங்களின் நண்பர் சொல்கிறாரா? நல்ல நண்பன் யார் ? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை தெளிவாக காணுதல் அவசியம்.

நினைவிருக்கட்டும் !

கூடா நட்பு தூக்குமேடைக்கு வழிகாட்டும். 
ஆனால் நல்ல நட்பு வாழ்க்கையின் சிகரத்திற்கே வழிகாட்டும்.

மன்னிப்பு வேண்டுகிறேன்!...

நாம் எல்லோரும் தவறு செய்கிறோம். இருந்தபோதிலும், மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்ய இதை ஒரு சாக்காக சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. தவறு செய்வது மனிதனின் இயற்கை.

தவறு செய்துவிட்டால் அதற்கான பரிகாரம், ஒன்று மீண்டும் தவறு செய்யாமல் இருப்பது, மற்றொன்று மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்பது.

மன்னிப்புக் கேட்பது என்பது மீண்டும் நம்பிக்கையை நிலைநாட்டுவதாகும். நான் ஒரு முறை உங்கள் நம்பிக்கையை முறித்திருக்கிறேன், ஆனால் மறுபடியும் இதைச் செய்யமாட்டேன் என்பதை நீங்கள் நம்பலாம் என்று இதன் மூலம் தெரிவிப்பதாகும்.

மனதுக்கு பிடித்தவர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க தயக்கமா? 

இந்த லிங்க கிளிக் செஞ்சு மனதார மன்னிப்பு கேளுங்கள்!

http://bit.ly/2t7uZzz

ஒரு தடவை மன்னிப்பு கேட்டுப்பாருங்கள்! - உங்கள் மனது லேசானதை உணர்வீர்கள்!.....

மன்னிப்பே அளிக்க முடியாத மன்னிப்பென்று எதுவும் இல்லை !!!!...

பெண்களே உஷார் !

👱 தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமாணத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது.

👱 இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது, நம் ஊரில் இந்த கொடுமைகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. இனியும் நாம், எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது முற்றிலும் தவறு.

👱 உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.

👱 செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.

👱 வீட்டிற்கு புதிதாக வரும் நபரின் மீது வைத்திருக்கும் கண் பார்வையிலிருந்து நாம் அகல கூடாது. ஏனெனில் வணக்கம் என்று சொல்லி முடிக்கும் முன், அவர்கள் நம்மை தாக்க நேரிடலாம். ஆகவே எந்நேரமும் விழிப்புணர்வோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

👱 இரவில் உங்களை யாராவது துரத்தினால் ஏதாவது ஒரு வீட்டிற்குள்ளோ, அல்லது கடையிலோ நுழைந்து உங்கள் நிலைமையை கூறி உதவி கேளுங்கள். அல்லது, ஏதேனும் ஒரு ஏடிஎம்க்குள் நுழைந்து விடுங்கள். அங்கு எப்போதும் காவலாளிகள் இருப்பதன் மூலமும், கேமராவும் இருப்பதன் மூலமும் யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது தப்பித்துக்கொள்ளலாம்.

பாலியல் வன்முறையை எதிர்கொள்ள :

👰 உடனடியாக செல்போனில் குடும்பத்தினருக்கோ அல்லது போலீசுக்கோ தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.

👰 உங்களிடம் இருக்கும் சேப்டிபின், கொண்டை ஊசி, குடை, கத்தி, பேனா, நகங்கள், பற்கள் போன்றவற்றை பயன்படுத்தி எதிர்தரப்பினரை காயபடுத்தி தப்பிக்கலாம்.

👰 உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.

👰 எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

பெண்களுக்கு பிரச்சனை ஏற்படுவது யாரால்?

👸 இந்த கேள்விக்கு அலசி ஆராய்ந்து கிடைத்த பதில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே. குடும்ப நபர்களைத் தவிர மற்ற எவரும் நம்மை எந்த நோக்கத்திற்காக பழகுகிறார்கள் என்று முற்றிலும் நம்மால் உணர முடியாது. அதை முதலில்புரிந்து கொள்ளுதல் அவசியம். எனவே, அரைகுறை ஆடை, சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்றவற்றில் படங்கள் பதிவிடுதல், தேவையற்ற அரட்டை, தேவையற்ற வீடியோ பதிவு போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

பாரதி கண்ட புதுமை பெண்களா நீங்கள்?

👸 இந்த சந்தேக கேள்விக்கு சரியான பதில். ஆம். ஆனால், தற்காப்பில் தலைகுனிந்து இருக்கிறது பெண்களின் நிலைமை. இதனை தவிர்க்க, சமூகத்தில் ஒரு நல்ல படிப்புடன் வேலை, ஒரு குடும்பத்தை நிர்வகித்து வழிநடத்தும் பொறுப்பு, எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டி முன்னோடியாக திகழ்வது போன்ற எண்ணற்ற பொறுப்புகள் காலடியில் இருக்கிறது என்பதை மறந்து அற்ப மனிதர்களின் பொழுது போக்கிற்கு போதை பொருளாக மாறக் கூடாது என்பதை கனவிலும் மறவாமல் செயல்பட வேண்டும்.